इस हफ़्ता मैंने टेका था मूवी का नाम रॉकी और रानी की प्रेम कहानी है| निर्देशक करण जौहर है| दिल्ली में रहने वाले दो परिवारों के बीच की कहानी। एक ओर रॉकी का पारंपरिक पंजाबी रंधावा परिवार है। दूसरी ओर रानी का पढ़ा-लिखा बंगाली चटर्जी परिवार है।
रंधावा परिवार में, परिवार की परमबारिक को प्राथमिकत होकर, परिवार की गौरव केलिए अपना खुद विकल्पों दयाग करना कुछ सहज है
இந்த வாரம் நான் பார்த்த திரைப்படம். ராக்கி மற்றும் ராணியின் காதல் கதை. இயக்கம் கரண் ஜோஹர்.
டெல்லியில் வசித்து வரும் இரு குடும்பங்களுக்கு இடையேயான கதைக்களம். ஒருபுறம் ராக்கியின் பாரம்பரிய பஞ்சாபி ரந்தாவா குடும்பம். மறுபுறம் ராணியின் நன்கு படித்த பெங்கால் சாட்டர்ஜி குடும்பம். ரந்தாவா குடும்பத்தில் குடும்ப பாரம்பரியத்திற்கு முன்னுரிமை அளித்து, குடும்பத்தின் பெருமைக்காக தங்களது தனிப்பட்ட விருப்பங்களை தியாகம் செய்து வருவது இயல்பாக இருக்கிறது. வீட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் வீட்டின் பெரியவர்களுக்குத் தெரியாமல் தங்களுடைய சொந்த விருப்பங்களை ரகசியமாக செய்து வருகின்றனர். ரந்தாவா குடும்பத்தின் தலைவி தனலெட்சுமி. அவளுடைய கணவர் கன்வால் லந்த் நியாபக மறதி நோயால் அவதிப்பட்டு சக்கர நாற்காலியிலேயே காலத்தினைக் கழிக்கிறார். அவர்களுக்கு திஜோரி என்ற மகனும், பூனம் என்ற மருமகளும், ராக்கி, காயத்ரி என்ற பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும்ப்பொழுது ஒரு பாட்டினைக் கேட்பதனால், கன்வால் உணர்ச்சி வசப்பட்டு, ஜாமினி என்ற பெயரை திரும்பத்திரும்ப உச்சரிக்கிறார். பின்னர் மருத்துவர் பரிசோதித்துவிட்டு ஜாமினி யாரெனக் கண்டுபிடித்து கன்வாலை சந்திக்க வைத்தால் அவருடைய நினைவு திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறரது என்று கூறிவிட்டுச்செல்கிறார். தன்னுடைய தாத்தா மீது அதீத பாசம் வைத்திருக்கும் ராக்கி தாத்தாவுடைய புத்தகம் ஒன்றில் ஜாமினியின் போட்டோவைக் கண்டுபிடிக்கிறான். அதனைக் கொண்டு தேடி ஜாமினியின் பேத்தியான ராணியினை கண்டடைகிறான். ராணியின் குடும்பம் நன்கு படித்த குடும்பத்தில் அனைவரையும் சமமாகவும், அனைவர் விருப்பப்படியும் வாழும் குடும்பம். ஜாமினியினை, கன்வால் சந்திக்க வைக்க அவருக்கு நினைவு மீண்டு விடுகிறது. அவர்களை சந்திக்க வைக்க வரும் ராக்கியும், ராணியும் காதலில் விழுகின்றனர். ஆனால் ராக்கிக்கு படிப்பு சுத்தமாக வராது. ராணியும் குடும்பமோ மெத்தப் படித்த குடும்பம். மறுபுறம் ராக்கியின் குடும்பத்தில் பெண்கள் குடும்பத்திற்காகவும், கணவருக்காகவும் தங்களது மொத்த வாழ்த்தையும் அர்ப்பணிப்பவர்கள். ஆனால் ராணி அப்படி இல்லை. இதனால் இருவரும் மற்றவர் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து மற்றவர் குடும்பத்தைப் புரிந்து கொள்வது எனவும், அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது எனவும் தீர்மானிக்கிறார்கள். பல இன்னல்களுக்குப்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதுவே கதைச் சுருக்கம்.
வழக்கமான இந்திய சினிமா பாணி திரைப்படம். ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். ஒரு மணி நேரம் ஆனவுடன் கொஞ்சம் சவால், உறவுச்சிக்கல்கள். கடைசியில் சுபமான முடிவு. படத்தின் கதாநாயகன் ரன்வீர் கபூர், நன்றாக நடித்திருக்கிறார். ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டுவரும் திரைப்படம் அல்ல. ஆலியா பட் கதாநாயகி. அவரும் நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பு என்றால் கன்வால் ஆக வரும் தர்மேந்திராதான். ஏனென்றால் அவருக்கான வசனங்களோ காட்சியோ மிகக் குறைவு. ஆனால் அவர் தோன்றும் காட்சியிலெல்லாம் அவருடைய நடிப்பு மிகப்பிரமாதமாக இருக்கிறது.
ஒருமுறை பார்க்கலாம்.