மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு – பசித்த பொழுது.
படிக்கும் பொழுது “இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?” என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கான ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு. உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே.
பெரும்பாலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக வடித்திருக்கிறார். சமூக பொருளாதார சித்தாந்தங்களெல்லாம் ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை எனலாம்.
மொத்தம் உள்ள 236 கவிதைகளில் 99% கவிதைகளை காமம், மழை, பூனை, அம்மு, அப்பு என ஐந்தே வகைக்குள் கொண்டு வந்து விடலாம். அம்மு, அப்பு அவர் குழந்தைகள் என நினைக்கிறேன். அவர்கள் தொடர்பாக பல கவிதைகள். நூல் தலைப்புக்கான் கவிதையே அப்புவை சுற்றித்தான். ஒருவேளை அவர்கள் அவரது குழந்தைகளாக இல்லாது இருந்து அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களாக இருப்பின் அதனை நயம்பட, உணர்வுப்பூர்வமாக தந்தமைக்காகவே பாராட்டலாம்.
பல கவிதைகள் தான் செய்த தவறுக்கான விளக்கம் கொடுத்து அது சரியெனக் காட்டிக்கொள்வதாகவே அமைந்திருக்கின்றன. அந்த விதத்தில் எதிர்மறையையும் பெருமையாய்க் கூறிக்கொள்கின்றன பல கவிதைகள்.
இவற்றையெல்லாம் விடுத்து முத்தாய்ப்பாய் சில கவிதைகளும் உண்டு. உதாரணமாக அவள் தன்னை விட்டுப் பிரிந்ததை இப்படிக் கூறுகிறார்.
நான் இல்லாத போது என் குரல் கேட்காத
ஒரு வாழ்க்கைக்குச் சென்று விட்டாள்”
மிகச்சிறப்பு.
மற்ற சில நெஞ்சைத் தொட்ட கவிதைகள்.
முதியவர்களின் முகங்களில்”
எனக்கு முன்னால் இங்கே இருந்தவர்கள்”
நன்றி.