இந்த பதிவைப் படிப்பதற்கு முன் இந்த பதிவைப் படித்திருத்தல் சிறந்தது. அதிக பணம் அச்சடித்தால் என்ன?
அதிக பணம் அச்சடித்தால் பணத்தின் மதிப்பு சரியுமென்றால் பணம் அச்சடிப்பதை நிறுத்தினால் பண மதிப்பு உயரத்தானே வேண்டும்? கேள்வி சரிதான்.
என்ன நடக்கும்? பணத்தின் புழக்கம் குறைவதால் மக்களிடம் அதிக பணம் புழங்காது. ஆனால் பொருள்களின் உற்பத்தி, மனித வளம் போன்றவை அதிகரித்துக்கொண்டே வரும். இதனால் குறைவான பணம். அதிக பொருள் சந்தையில் நிலவும். பொருள்களின் விலை குறையும். அதோடு குறைவான பணமே புழக்கத்தில் இருப்பதால் வேலைவாய்ப்பு குறையும். யாரும் வேலைக்கு ஆள் எடுக்க மாட்டார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடும்.
ஆக பணப்புழக்கத்தை உற்பத்திக்கு ஏற்ப அதிகரிப்பதே சிறப்பு.