நிறமும் மொழியும்

நம்மில் பலருக்கும் இந்த எண்ணம் உண்டு. சிவப்பாய் இருப்பவர்கள் அழகானவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவானவர்கள். அது தவறான எண்ணம் என்பதே திண்ணம்.

நம்மிடத்து உள்ள இந்த எண்ணம் நமக்கு முந்தைய தலைமுறையிடமிருந்து நம்மிடத்தே வந்து விட்டது. நமக்கு முந்தைய தலைமுறையிடம் இருந்த அளவிற்கு இப்போது இல்லையென்றாலும், அற‌வே இல்லையெனக் கூறிவிடலாகாது.

உண்மை இதுதான். சிவப்பு அழகல்ல, நிறம். ஆங்கிலம் அறிவல்ல, மொழி. 

கடந்த காலப் பெரும்பான்மையான புத்தகங்கள், தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் ஆங்கிலத்தில் வெளியானமையால் ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி என படிப்படியாக வலுக்கொண்டுவிட்டது. அதேபோல நம்மை ஆண்டவர்கள் வெள்ளையாய் இருந்த காரணத்தாலோ என்னவோ சிவப்பாய் இருப்பவர்கள் உயர்வானவர்கள் என்ற எண்ணம் கொண்டு பின்னாளில் சிவப்பானவர்கள் அழகானவர்கள் என்ற எண்ணமும் கொண்டுவிட்டோம்.

அடைமொழி

அடைமொழிக்கு ஆசைப்படும் மனிதாஅறிவாயா? இறந்தபின் உன் பெயரே உனதில்லை,பிணமென்பார்.

சாவு – சிறுகதை

நான் இதுவரைக்கும் பாக்காத‌ சாவு அது. வழக்கம்போல ஆபீசில‌ வேலை பார்த்துக்கிட்டுருக்கும்போதுதான் அந்த போன் வந்துச்சு. “நம்ம ஹவுஸ் ஓனர் அம்மா எறந்துட்டாங்க”. சொன்னது என் ரூம் மேட். கூடவே இதையும் சொல்லிட்டார். “வீட்ல சமைக்க முடியாதாம்; வெளியில சாப்பிட்டுக்கச் சொல்லிட்டார்”. போனை வச்சுட்டார்.

நான் வேலை பாக்குறது சிங்கப்பூருல.. வந்து வருச‌ம் ஒன்னாச்சு. நம்ம ஊர்லமாதிரி, ஹவுஸ் ஓனருன்னா நம்ம‌ ஒரு வீட்லயும் அவர் ஒரு வீட்லயும் இருக்குறதில்லை. இங்க எப்புடின்னா, நம்ம‌ ஒரு ரூம்ல இருப்போம், அவர் ஒரு ரூம்ல இருப்பார். கிச்சன் ரெண்டு பேருக்கும் பொது.

 ஹவுஸ் ஓனர் தமிழர்தான். ஆனால் சிங்கப்பூர்ல‌ பிறந்தவர். அவர் அம்மா இங்கு வந்து செட்டில் ஆனவர். ஹவுஸ் ஓனர் திருமணம் செஞ்சுக்கல. தனியாகத்தான் இருக்கிறார். வயசு ஒரு 55 இருக்கும். அவர் அம்மா அவரோட‌ இருந்ததில்லை. எங்கோ மகள் வீட்ல‌ இருக்கறதா சொல்லுவார். நாலஞ்சு தடவ‌ பார்த்திருக்கிறேன். இங்கு வருவாக. ஒரு நாள் இருந்து விட்டுப் போயிருவாங்க‌. அவுக‌தான் செத்தது.