தனியனாய், பரதேசியாய் சுற்றித்திரியும் ஞானகுரு எனக்கூறப்படுபவரின் பதில்களின் தொகுப்பு. பெயரை வைத்து அவரை ஏதோ புனிதர், மானுட அவதாரம் தரித்த மகான் என்றெல்லாம் எண்ண வேண்டியதில்லை. நம் ஊரிலே தெருவிலே இதைவிட அருமையாகத் தத்துவங்கள் கூறும் பல சாமியார்கள் உண்டு. குடித்துவிட்டு, கஞ்சா அடித்துவிட்டு உளரும் ஒருவருடைய சொற்கள் புத்தகமாயிருக்கின்றன. வேறு ஒன்றும் இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை யே(கஞ்சா, குடி, மாமிசம், சுருட்டு) அறமாய்க் கொண்டு அதையே நியாயப்படுத்தும் தகவல்களை அறிவுரைகளாக ஒட்டுமொத்த நூலும் விளம்புகிறது. இந்த அறிய தகவல்களை கூற ஞானகுரு வேண்டாம், நம் தெருவில் குடித்துவிட்டு இரவில் அலையும் ஒருவனே போதும் என நினைக்கிறேன்.
ஏற்கனவே ஒரு 10 புத்தகங்களாவது ஒருவர் வாசித்திருப்பாரானால் அவருக்கு இப்புத்தகம் மீது ஒரு மிகப்பெரிய வருத்தம் கண்டிப்பாக ஏற்படும். நானும் அந்நிலையிலேயே நிற்கிறேன். இந்தப் புத்தகம் ஒரு கடைநிலைக் கட்சிப் பிரமுகரின் மேடைப் பேச்சு என்ற அளவில்தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்குத்தான் அந்த வசதி உண்டு. அதிகம் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. ஏதாவது சற்றே உணர்ச்சிப்பூர்வமாக, அறைகுறைத்தகவல்களை வைத்துக் கொண்டு பேசி விட்டுப் போய் விடலாம். ஏனென்றால் அது ஆவணப்படுத்தப்பட மாட்டாது.
ஆனால் புத்தகங்கள் அப்படியில்லை. ஒரு புத்தகம் என்பது பலமுறை திருத்தப்பட்டு, தகவல்கள் சரி பார்க்கப்பட்டு வெளிவரக்கூடிய ஒன்று. எழுதப்பட்ட காலத்தை தன்னுள்ளே தாங்கி நிற்கும் பெட்டகம். அதானேலேயே புத்தகங்கள் படிப்பதற்கு தலையாய முன்னுரிமை கொடுக்கும் ஒருவன் நான். புத்தகங்கள் எல்லாமே உயர்வானவையாய் ஏதோ ஒரு விதத்திலாவது இருக்குமென எண்ணி வாசிக்கும் எனக்கு இது ஒரு சம்மட்டி அடி, இங்கும் விதி விலக்குகள் உண்டு என. ஒரு நூல் என்பதற்கான குறைந்த பட்ச வரையறை கூட இல்லாத நூல். சிறப்பாய் இருப்பது அட்டைப்படமும் தலைப்பும் மட்டுமே. நான் வேண்டுவதெல்லாம் தயவு செய்து இது போன்றவற்றையெல்லாம் ஆவணப்படுத்தாதீர்கள்.
நான் படித்த புத்தகங்களில், மிகச் சிறந்த புத்தகம் இது என்பேன்… விட்டேத்தியாக திரியும் சாமியாரிடம் இவ்வளவு இயல்பான, தெளிவான, உண்மையான கருத்துக்களா, என்று ஆச்சர்யப்பட வைக்கும்… என் வாழ்க்கையில் , பெரிய திருப்பத்தை ஏற்ப்படுத்திவிட்டார் எழுத்தாளர் முருகன்.. நன்றி .. வாழ்த்துக்கள்