ஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
பெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார்.
பெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கைப் பார்த்து, அருகில் சென்று முகர்ந்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.
அதைக் கண்ட பெர்னாட்ஷாவின் நண்பர் “கட கட…”வென்று சிரித்து விட்டார்.பிறகு அவர், “பார்த்தீர்களா ஷா! கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!” என்றார்.
அவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னாட்ஷா “உண்மைதான்! கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கை சாப்பிடாதுதான்!” என்றார்.அதைக் கேட்டதும் நண்பரின் முகம் சுருங்கி விட்டது.