எளிய அழகிய இஸ்லாம்

அனைவரிடத்தில் இஸ்லாம் மதத்தினைப் பற்றிய ஒரு தவறான அபிப்ராயத்தினை ஏற்படுத்தி இருக்கும் ஒரு சாரர்கள் மறந்த இஸ்லாமின் ஒர் அழகிய‌ பக்கம். https://www.youtube.com/watch?v=x1HXXgeKhL8&feature=youtu.be

தூய்மை இந்தியா

சமீபத்தில் நமது பிரதமர் அவர்களால் தூய்மை இந்தியா துவங்கப்பட்டதை விமர்சனம் செய்து பல்வேறு விதமான கட்டுரைகளும் பேச்சுக்களும் இணையத்தில் உலாவுகின்றன. ஒரு எளிய இணைய வாசகன் வாசிக்கும்பொழுது அவன் நம்பக்கூடிய வண்ணமே அப்பதிவுகள் இடப்படுகின்றன. எதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள்? ஒன்று…

ஜெயலலிதா கைதும், மக்களின் மனநிலையும்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். அதனைப் பற்றிய பேச்சு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அது தொடர்பான நிகழ்வுகளின் போதே இப்பதிவை இட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட இரைச்சலுக்கு மத்தியில் இதற்கு இடமில்லாது போகுமென்பதால் அவ்விவாதங்கள் முற்றிலுமாக…

its, it’s என்ன வேறுபாடு ?

ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கக்கூடிய நூறு வார்த்தைகளில் it ஒன்று. ஆனால் அதில் உள்ள வேறுபாடு அறியாமலேயே பல இடங்களில் அந்த வார்த்தையை உபயோகிக்கின்றோம். its என்பது it என்பதன் possessive form. அதாவது உடைய என்ற பொருளில் வருகிறது. அவனுடைய,…

கேள்வி பதில்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, மிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்திய நாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம். என்னுடைய வேலையும் என்னுடைய…

A Separation – Movie

A Separation என்ற ஈரானிய திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ஆஸ்கர் ஃபர்காதி இயக்கம். முக்கிய கதாபாத்திரங்கள் பேய்மன் மோடி,லைலா ஹடாமி,ஷாகப் ஹூசைனி. நாதெர், சிமென் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்படுவதிலிருந்து கதை தொடங்குகிறது. சிமென்…

லஜ்ஜா – அவமானம்

1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக்…

காஷ்மீரும் ராணுவமும்

காஷ்மீர் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள் பற்றிய நேரத்தில் வாசித்த சிறந்ததொரு கட்டுரை. திருச்சி வே விஜயகிருஷ்ணன் அவர்களால்.

எனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை பணயம் வைக்கும் தனிமனித சுதந்திரங்களுக்கு அப்பால் உட்கட்டமைப்பு கொண்ட ஒரு இயக்கத்தின் மீது அதிகமான மரியாதைதான். அதனால் அவர்கள் சாமானியர்கள் போல் குற்றங்கள் புரிவதில்லையா என்று கேள்வி அபத்தமானது. உண்டு. எல்லா மனிதர்களை போல் அவர்களும் குற்றம் புரிகிறார்கள். ஆனால் எல்லா வகையிலும் சுதந்திரத்தை அனுபவிக்கும் எல்லாவிதங்களிலும் தன் மன அழுத்தங்களை இலகுவாக்கக்கூடிய சாந்தியங்க்களை கொண்ட வாழ்வில் வாழ்ந்துகொண்டு இக்கட்டான சூழலில் வாழ்பவர்களை விமர்சிக்ககூடாது. இராணுவத்தினரையும் சாமான்யர்களை சமன் சட்ட நிலையில் நிறுத்துவது உடன்பாடில்லை.

இங்கு இராணுவத்தை ஒரு இயக்கமாக பார்க்கிறோம். உடனே ஒரு தனி நிகழ்வை சுட்டிக்காட்டி அதை பொது படுத்துதல் ஏற்புடையதல்ல. சங்கடமான மன அழுத்தங்கொண்ட சூழலில் உயிரை பணயம் வைக்கும் வேளையில் ஈடுபடுவோரை சாமான்யனுக்குறிய சட்டங்கள் வழியே தண்டிக்க சொல்வது அபத்தத்தின் உச்சம்.

என்னத்தான் நினைக்கிறார்கள் இவர்கள்? இராணுவத்தை கலைத்துவிடலாம் என்றா? இல்லை எல்லா இராணுவ வீரரையும் புத்தர்களாக மாற்ற வேண்டும் என்றா?

நாம் ஏன் வாசிக்க வேண்டும்?

எல்லோரும் வாசிப்பதில்லை. ஒரு சிலரே வாசிக்கின்றனர். அவர்கள் எதற்காக வாசிக்கிறார்கள்? வாசிப்பு சோறு போடுகிறதா? ஆம்,உலகுக்கே சோறு போடுகிறது, இவ்வுல‌கையே இயக்குகிறது. உலகையே நிர்ணயம் செய்கிறது. வாசிப்பு இல்லாதவனிடத்து தானும் உலக நடப்பு தெரிந்ததைப்போலவும், தானும் வாசிப்பவன் என்ற எண்ணம் கொண்டிருக்கச்…