லிவ்ரே டூர்னாய்ஸ் என்பது 1800 களின் பிற்பகுதியில் பிரான்சில் உபயோகப்படுத்தப்பட்ட பணமாகும். இது பிரான்சின் டூர்னாய்ன் மாகாணத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. இரண்டாம் பிலிப் மன்னன் இம்மாகாணத்தைக் கைப்பற்றியதும் அதுவரை புழக்கத்திலிருந்த லிவ்ரே பாரிசிஸிற்கு பதில் லிவ்ரே டூர்னாய்ஸை அதிகாரப்பூர்வ பணமாக அறிவித்தார். இருப்பினும் 1667 வரை லிவ்ரே பாரிசிஸும் புழக்கத்தில் இருந்தது.
ஒரு லிவ்ரே ரூர்னாய்ஸ் என்பது 20 சூஸ்களாகவும் ஒரு சூஸ் என்பது 12 டினையர்ஸாகவும் பகுக்கப்படும். கடைசியாக 1720 ல் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் வரை லிவ்ரே ரூனாய்ஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் லிவ்ரே என மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டது. உலக வங்கி மற்றும் உலக பணப்பரிமாற்றங்கள் ஏற்பட்ட 13ஆம் நூற்றாண்டில் டுகாட் மற்றும் ப்லொரின் போன்ற நாணயங்கள் உபயோகப்படுத்தப்பட்ட பொழுது பிரான்சின் பணமாக லிவ்ரே கணக்கிடப்பட்டது. பிரான்சிடமிருந்து அமெரிக்கா பெற்ற நிலத்திற்கான பணத்தைப் பெற்ற பொழுது (லூசியானா ஒப்பந்தம்) அமெரிக்க டாலருக்கு எதிரான லிவ்ரே டூர்னாய்சின் மதிப்பு வரையறுக்கப்பட்டது.
1577 ல் ஈகு எனும் நாணயம் ஐரோப்பாவில் புழக்கத்தில் அதிகமாக இருந்ததால் லிவ்ரே டூர்னாய்ஸிலிருந்து பணப்பரிமாற்றம் ஈகுவிற்கு மாற்றப்பட்டது. பின்னர் 1602 ல் லிவ்ரே டூர்னாய்ஸிற்கே மாற்றப்பட்டது.
இந்நாணயத்தின் மதிப்பு அதன் உலோகத்தை விட குறைந்ததால் மக்கள் இந்நாணயத்தினை பதுக்கி வைக்கத் தொடங்கினர். இதனால் அரசாங்கம் மலிவான உலோகங்களைப் பயன்படுத்தி நாணயங்களை தயாரிக்கத் தொடங்கினர்.