ஒநாய்குலச்சின்னம் – சி.மோகன் (ஜியாங் ரோங்க்)
சமீபத்திய ஆண்டுகளில் நான் படித்த, கேட்ட பெரும்பாலான இடங்களில் ஓநாய் குலச்சின்னம் என்ற நாவலின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருந்தது. இது தொடர்பாக விவாதங்கள்,பாராட்டுக்கள் என ஏதாவது ஒன்று. அதனால் அந்த புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற வலுவான எண்ணத்தால் உந்தப்பட்டு அந்த புத்தகத்தை வாசித்தேன்.
[callout title=”ஓநாய் குலச்சின்னம் என்ன நாவல்?”]1965 களில் மங்கோலிய மேய்ச்சல் நிலமும், அம்மக்களின் குலச்சின்னமான ஓநாய்களும் ஹேன் சீனர்களால் விவசாயத்திற்காகவும், வளர்ப்பு மிருகங்களுக்காகவும் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டது என்பதை ஒரு சீனனின் பார்வையில் விவரிக்கும் நாவல்.
[/callout]
ஜென் சென் என்னும் சீன மாணவன் மற்ற மாணவர்களோடு மங்கோலிய ஓலொன்புலாக் மேய்ச்சல் நிலத்தில் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவும், மேய்ச்சலுக்காகவும் அனுப்பப்படுகின்றான். ஆனால் அவன் அம்மங்கோலிய மக்களின் நடவடிக்கைகளாலும் ஓநாய்களாலும் பெரிதும் கவரப்பட்டு ஒநாய்களை நேசிக்கத் தொடங்குகிறான்.