நாகேஸ்வரராவ்,நாகர்ஜுனா,நாக சைதன்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நான் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு திரைப்படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்ததே இல்லை. எவ்வளவு நல்ல திரைப்படம் என்றாலும். ஆனால் இந்த திரைப்படத்தினை இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டேன். காரணம் மற்ற படங்கள் என் புத்தியை தொட்டிருக்கின்றன. இப்படம் என் மனதைத் தொட்டதே. முதல்முறை போலவே இம்முறையும் கண்களில் கண்ணீர் பல இடங்களில். வாழ்க்கைதான் எத்தனை அழகானது? நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவனாகவே வாழ்ந்துவிட்டுப்போவதுதான் எத்துனை சுகமானது? என்னை மீண்டும் மீண்டும் பரிசுத்தமானவனாக மாற்றும் இது போன்ற திரைப்படங்களுக்காகவே இதுவரை வந்த எல்லா தரக்குறைவான படங்களையும் மன்னித்துவிடலாம் என்று தோன்றுகின்றது. இதுவரைப் பார்க்கவில்லையென்றால் பாருங்கள், கண்டிப்பாகப் பாருங்கள்.
Posted inவிமர்சனம்