மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

"இது எதுக்கு? சறுக்கி வெளையாடுதக்கா?" "கெடட்டி" இந்த வரியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன் கிட்டத்தட்ட இரண்டு வாரமாக‌. நேற்று புத்தகத்தை நூலகத்தில் திருப்பி செலுத்தும்பொழுது அமர்ந்து மீண்டும் அவ்விடத்தை வாசித்தேன். வாய்விட்டு சிரித்துவிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். பார்த்து விட்டுப் போகட்டுமே!…