எம்.ஏ.அப்பாஸ் அவர்களால் எழுதப்பெற்றது. வெளிவந்த ஆண்டு 1960 களின் தொடக்கம். 2006 ஆல் மீண்டும் புதிய பதிப்பாக அம்ருதா பதிப்பகத்தினர் கொண்டு வந்திருக்கின்றனர்.
சிறந்த பத்து எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களின் படைப்புகள் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தினையும் செய்யும் புத்தகம். அந்த பத்துப் படைப்பாளிகள் இவர்களே.
- தஸ்தயேவ்ஸ்கி – ரஷ்யா
- கார்க்கி – ரஷ்யா
- T.H. லாரன்ஸ் – இங்கிலாந்து
- ஹெமிங்வே – அமெரிக்கா
- ஜேம்ஸ் ஜாய்ஸ் – அயர்லாந்து
- அல்பட்டோ மொறாவியா – இத்தாலி
- சரத் சந்திர சாட்டர்ஜி – இந்தியா
- தாமஸ் ஹார்டி – இங்கிலாந்து
- எமிலி சோலா – பிரான்ஸ்
- ரவீந்திரநாத் தாகூர் – இந்தியா
இதிலுள்ள ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றியுமே தனி நூல் அளவில் வாசிக்கவேண்டியவை உண்டு. இருப்பினும் ஒரு எளிய முதற்கட்ட வாசிப்பாக இப்புத்தகத்தினைக் கொள்ளலாம். 1960 களிலேயே உலகின் பல்வேறு பட்ட படைப்பாளிகளையும் வாசித்து அவர்களைப் பற்றி புத்தகமாக தமிழில் எழுதியிருப்பதில் நமக்கு பெரியதொரு மகிழ்ச்சி. வாசிக்கலாம்.