நீயா நானா கோபிநாத் அவர்களால் எழுதப்பெற்று 2008ல் வெளிவந்த சுயமுன்னேற்ற நூல். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இதில் எதையும் தான் புதிதாக சொல்லிவிடவில்லை என்றும் தனக்கு சொல்லப்பட்டதை தான் சொல்வதாகவும் சொல்லி ஆரம்பிக்கிறார் கோபிநாத். எளிமையான கருத்துக்கள். நமக்கு நன்கு தெரிந்த பரீச்சயமான ஒருவர் கூறுவது போல்தான் ஒட்டு மொத்த புத்தகமுமே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். இப்புத்தக வாசிப்பு கண்டிப்பாக வாசிப்பவருக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும், அவர் எத்துனை ஆழமான புத்தகங்களை வாசிப்பவராக இருந்தாலும். அதனால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஜக்கி வாசுதேவின் சில புத்தகங்கள், தாயம் போன்ற புத்தகங்களை இதன் எழுத்து நடை நினைவூட்டுகின்றது.
இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்கள்.
- மகிழ்ச்சியைத் தன்னுள்ளே தேடுங்கள்
- மகிழ்ச்சியாக இருங்கள்
- செய்யும் வேலையை விரும்பி செய்யுங்கள்
- வாழ்க்கையை சுவாரசியமிக்கதாக மாற்றிக்கொள்ளுங்கள்
- தோல்வி அடடைவது தவறானது அல்ல என்பதனை நினைவில் கொள்ளுங்கள்
- பிரச்சினையத் தள்ளிப்போடுவதை விட சிறிது சிறிதாக தீர்க்க முயலுங்கள்
- உங்களை நீங்களே உயர்வாக எண்ணுங்கள்
- விடாப்பிடியாக இருக்காமல் சற்றே விட்டுக்கொடுங்கள்
- மற்றவர் மீது அன்பாக இருங்கள்
- உயர்வான எண்ணம் கொள்ளுங்கள்
- ஆழ்மனதின் மீது நம்பிக்கை வையுங்கள்
- மற்றவர்களையும் புரிந்து கொள்ள முயலுங்கள்
- இழந்ததன் மீதான அதீத புலம்பலைக் கைவிடுங்கள்
- சவாலான வேலைகளை செய்யுங்கள்
- உற்சாகமான நண்பர்களோடு பழகுங்கள்
வாசிக்க வேண்டிய புத்தகம்.