மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் எழுதப்பெற்ற மற்றும் கவிதையரங்குகளில் வாசிக்கப்பெற்ற கவிதைகளின் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. கற்பகம் புத்தகாலயம் வெளியீடு.
இத்தொகுப்பில் என்னை ஈர்த்த கவிதை ‘புகார்கள் மற்றும் ஆலோசனைகள்’.
‘எந்தப்புகாரும் இல்லையென்றில்லை
எழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள்‘
ஏதேனும் நடைபெறுமிடத்திலேயே புகார் அளிக்க இயலும். ஆனால் இங்கே புகாரளிக்கும் அளவிற்கூ கூட செயல்கள் நடைபெறவில்லை என்பதன் அங்கதம் வெளிப்படும் தொணி என்னைக்கவர்ந்தது.
அதே கவிதையில்
‘ஆனால் நண்பரே உம்மிடம் சொல்ல
ஆலோசனைகள் உள்ளன எம்மிடம்
கண்துடைப்புக்காக இங்கே இருக்கும்
இந்தப் பெட்டியை அகற்றலாமென்று…‘
என்றும்
‘இந்தக் கவிதை படித்ததும் வருகிற
வேகத்தை வேலையில் காட்டலாமென்று…’
என்றும் வரும் வரிகளும் என்னைக் கவர்ந்தவை.
இந்நூலின் இறுதியில் சில ஆங்கில கவிதைகள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் முத்தையா. அதில்
The Child’s first grief என்னும் கவிதையின் மொழிபெயர்ப்பில்
‘Oh! while my brother played with me
Would I have loved him more?‘
என்பதனை
‘ஆடி மகிழ என் தம்பி இல்லையே,
யாரிடம் அன்பைச் செலுத்தட்டும்‘
என்று மொழிபெயர்த்திருக்கிறார். ‘என் தம்பியோடு விளையாடிய காலங்களில் நான் இன்னும் அவனை நேசித்திருக்கலாமோ?‘ என்று தானே வரவேண்டும். வரிக்கு வரி மொழி பெயர்க்க வேண்டியதில்லை என்றாலும் மொழி பெயர்ப்பிற்கும் உண்மையான அர்த்தத்திற்கும் பெரிய வேறுபாடாக இருக்கிறது அந்த மொழிபெயர்ப்பு.
வாசிக்கலாம்.