ராமன் பிறந்த ரகுவம்சத்தின் வரலாறு, சுருக்கமான வடிவில். அ.வெ.சுப்பிரமணியன் அவர்களால் காளிதாசனின் மூலவடிவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. எளிய பிழையற்ற மொழிநடை. திலீபனின் தொடங்கி, ரகு, அஜன், தசரதன் வழியாக ராமனின் வரலாறைக் கூறும் நூல். சூர்ய குலம் எனப்படும் ரகுவம்ச வரலாறை அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம். ஒட்டுமொத்த அரசகுலத்தின் தோற்றம் கிடைக்கும். ரகுவம்ச மன்னர்களின் பெருமையைப் பற்றிக் கூறும் நூல். ஆதலால் ஒரு வரலாற்று நூல்போலக் கொள்ள இயலாது. ஆழ்ந்த மத நம்பிக்கையாளர்களுக்கான ஆரம்பப் புரிதலுக்கான நூல்.