நவீன விஞ்ஞானம் கண்டறிந்து நிறுவிய பல்வேறு உண்மைகள் ஏற்கனவே எவ்வாறு குர் ஆனில் விளக்கப்பட்டுள்ளது என்பதனை விவரிக்கும் புத்தகம். சாஜிதா புக் சென்டர் வெளியீடு. தமிழாக்கம் இப்னு ஹூசைன்.
விண்ணியல்,இயற்பியல்,புவியியல்,மண்ணியல்,சமுத்திரவியல்,உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவம், உடல் செயலியல், கருவியல், பொது விஞ்ஞானம் ஆகிய துறைகளின் இந்நூற்றாண்டு கண்டுபிடிப்புகளும் அறிதல்களும் எவ்வாறு ஏற்கனவே குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதனை புத்தகம் முழுவதும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக்.
பெருவெடிப்புக் கோட்பாடு, பூமி தட்டையானது அல்ல உருண்டையானது, கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றுகிறது, நீர் சுழற்சி முறை, அனைத்து உயிர்களும் தண்ணீரில் இருந்து உருவானது, நிலவின் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி, சூரியன் தன்னைத்தானே சுற்றுவது, விரிவடையும் பிரபஞ்சம், தாவர இனங்களிலும் பாலினம் உண்டு, கரு எவ்வாறு உருவாகின்றது, கருவிற்கு முதலில் செவித்திறனும் அதன் பின்னர் பார்வைத்திறனும் உண்டாகிறது போன்ற அறிவியல் உண்மைகள் பெரும்பாலும் கடந்த இரு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே நிருபிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஜாகிர் நாயக் அவர்கள் விவரிக்கிறார்.
மத நம்பிக்கை உள்ளவராகவோ அல்லது இல்லாதவராகவோ இருப்பினும் இப்புத்தகத்தில் உள்ள தகவல்களுக்காகவேனும் இப்புத்தகத்தினை கண்டிப்பாக வாசிக்கலாம். தேனிக்களின் நடனம், எறும்புகளின் வாழ்க்கை முறை, பறவைகளின் இடம்பெயர்வு போன்ற பல்வேறு தகவல்கள் இந்நூலில் உண்டு.
வாசிக்கவேண்டிய புத்தகம்.