
கரண் ஜோகர் இயக்கத்தில் 2001 ல் வெளிவந்த இந்தி திரைப்படம். தயாரிப்பு தர்மா புரொடக்சன்ஸ். நடிப்பு அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஷாருக்கான், கஜோல், ராணி முகர்ஜி, கரீனா கபூர், ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் பலர். யஷ்வர்தன் ராய்சந்த் தலைமுறைகளாக தொழிலதிபர் குடும்பம். அவருடைய மனைவி நந்தினி ராய்சந்த். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அவன் ராகுல். அதன் பின்னர் ஒன்பது ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன் ரோஹன். ராய்சந்த் தம்பதியினர் தத்தம் தாய்மார்களோடு ஒன்றாக வசித்து வருகின்றார்கள். யஷ்வர்தன் தன்னுடைய நண்பனின் மகளை தன்னுடைய மூத்த மகனான ராகுலுக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார். அதற்கிடையில் ராகுல் அஞ்சலி மீது காதல் வயப்பட்டு அவரைத் திருமணம் செய்து கொள்கிறான். அதனால் வெறுப்படையும் தந்தை நீ என்னுடைய உண்மையான மகனாக இருந்திருந்தால் இதனை செய்திருக்க மாட்டாய் எனக் கோபத்தில் கூறி விடுகிறார். அதனால் தன் மனைவியோடு வீட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். இதற்கிடையில் அவர்களுடைய இரண்டாவது மகனான ரோஹன் தன்னுடைய படிப்பினை முடித்துவிட்டு திரும்பி வருகிறார். தன்னுடைய பாட்டிகளிடமிருந்து இந்த தகவலைத் தெரிந்து கொள்ளும் ரோஹன் லண்டன் சென்று தன்னுடைய அண்ணன் குடும்பத்தினை மீண்டும் தன்னுடைய தாய் தந்தையோடு சேர்ப்பதே கதை.