சுந்தர ராமசாமியால் எழுதப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அக்காலகட்டத்தில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்திய நாவல். ஓர் இளம் எழுத்தாளன் தன்னுடைய ஆளுமையாக எண்ணும் ஓர் எழுத்தாளனைப் பற்றி எழுதும் குறிப்புகள், அதுவே நாவல்.மிகச்சிறந்த அங்கதம். சுந்தர ராமசாமி தன் வாழ்நாளில் சந்தித்த, பழகிய உண்மை நபர்களை வைத்தே நாவலை வடிவமைத்ததாக ஓர் விமர்சனம் உண்டு. உதாரணமாக மையக்கதாபாத்திரமான ஜேம்ஸ் ஜோசப். வழக்கமான நாவல்களின் கட்டமைப்பை உடைத்து புதியதோர் நாவல் வடிவத்தை தமிழில் உருவாக்கிய நாவல். ஆரம்பகால வாசிப்பாளர்கள் கருதும் நாவலின் வடிவத்திற்கு முற்றிலும் மாறானது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.
Posted inபுத்தகம்