மோடி அவர்களைப் பற்றி பல்வேறு காலகட்டங்களில் வினவு இணையதளம் மற்றும் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். நூலகத்தின் காட்சிப்பலகையில் வைக்கப்பட்டிருந்ததால் இப்புத்தகத்தை வாசித்தேன். முற்றிலும் ஒற்றைச்சார்பு கொண்ட கட்டுரைகள். ஒற்றை வரி இதுதான். மோடி வெறுப்பு. அதற்கான சம்பவங்களையெல்லாம் எடுத்து கட்டுரையாக்கியிருக்கிறார்கள். அதிலும் கீழ்த்தரமான வார்த்தைகள். இரண்டாவது நோக்கம் புத்தகம் வெளிவந்த காலம் 2013 ஆம் ஆண்டு. அப்போதைக்குத்தான் மோடி அவர்களை பிரதமராக அறிவிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அதனால் மோடியின் மதிப்பினைக்த குறைக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட புத்தகம். பெரும்பாலான கட்டுரைகளில் தகவல்களை விட வசவுகளே உள்ளன. நம் நாட்டில் அனைவரையும் விமர்சிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக இத்தனை கீழ்த்தரமான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டியதில்லை. நாட்டிலுள்ள பெரும்பாலானோர் குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களின் எதிர்ப்பாளர்களே. ஆனால் அவர்களையும் இந்துக்கள் என்று பொதுப்படுத்துவதன் மூலம் இந்து மத அடிப்படைவாதிகளோடு அனைத்து இந்துக்களையும் இணைக்கும் வேலையையே இந்த கட்டுரைகள் செய்கின்றன. தவிர்க்க வேண்டிய புத்தகம்.