எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே. ஆழமற்ற செறிவற்ற தகவல்கள். அதனால் வரலாற்றினை விரும்பி படிக்கும் ஒருவருக்கும் சலிப்பே தோன்றுகிறது. இருப்பினும் ஒரு விதத்தில் இதன் பயன் என்னவெனில், நமக்குத் தெரியாத ஒரு தகவலினை ஏதாவது ஒரு கட்டுரையில் படிக்கும்பொழுது அவற்றை பற்றித் தெரிந்துகொள்ள முயல ஓர் வாய்ப்பு உண்டு. அதாவது அந்த தகவலினை இப்புத்தகத்தில் தேடாமல் வேறு எங்காவது படிக்கலாம். மற்றொன்று கட்டுரைகளோடு தொடர்புடைய பல்வேறு புத்தகங்களினை கட்டுரைகளின் நடு நடுவே பிரசுரித்திருப்பதனால் அப்புத்தகங்களைப் படிக்கலாம். இது மற்றோர் பயன். மற்றபடி இப்புத்தகத்தில் பிரமாண்டம் என்பது தலைப்பு மட்டுமே.