இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி ஜாகிர் நாயக் அவர்கள் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம். வெளியீடு சாஜிதா புக் சென்டர். வருடம் நவம்பர் 2010. தமிழாக்கம் முஹம்மது. இஸ்லாம் மீதான விமர்சனமாக வைக்கப்படும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் ஆகியவற்றை மறுத்து குரானில் கூறப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் விளக்கங்களையும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக்.
ஆன்மீக உரிமைகள்
பொருளாதார உரிமைகள்
சமூக உரிமைகள்
கல்வி உரிமைகள்
சட்ட உரிமைகள்
அரசியல் உரிமைகள்
இவற்றைப் பற்றி ஒவ்வொரு அதிகாரமாக விளக்குகிறார். இறுதியாக கேள்வி பதில் பகுதி. பங்கேற்பாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வாசிக்கலாம்.