சிங்கப்பூர் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரமலான். வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான முஸ்லீம் மக்கள் மலே இனத்தவரகாவே இருக்கின்றனர். இந்திய முஸ்லீம்களும், சீன முஸ்லீம்களும் குறைந்த அளவிலேயே இருக்கின்றனர்.
நம் ஊரைப்போலவே இங்கும் பண்டிகைக்கால சந்தைகள் உண்டு. ஆனால் இங்கு முப்பது நாட்களுக்கு மேலாக சந்தைகளை நடத்துகின்றனர். இந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்காக சந்தைக்கு நானும் சென்றேன். பல நாட்டு உணவு வகைகள், பானங்கள், அலங்காரப் பொருட்கள், ஆடைகள்,மெத்தை விரிப்புகள், விளையாட்டுப் பொருட்கள், கேளிக்கை விளையாட்டுக்கள் என பட்டியல் வெகு நீளம். இவ்வளவு கடைகள் இருந்தாலும் அந்த மொத்த இடமும் மிக சுத்தமாக இருக்கிறது. நம் ஊர் சந்தைகளைப் போல் இல்லை.
அதுமட்டுமின்றி பல நாட்டு உணவுகளை சுவைப்பதற்கு சரியான இடம். பல வித உணவுகளை கண் முன்னே தயார் செய்து தருகிறார்கள்.