அமரர் கல்கி அவர்களால் 1941 ஆம் ஆண்டு எழுதப்பெற்ற நூல், காவியம். சோழ நாடும், பல்லவ நாடுமே கதைக்களங்கள். பார்த்திப மன்னனின் கனவான சுதந்திர தேசத்தை அவரது மகனான விக்கிரமன் நனவாக்குவதே கதை. இது காதல் காவியமோ என்ற எண்ணம் அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கிறது.
எளிய கதை.மிகச் சிறந்த வர்ணனை. அந்த வர்ணனைகளுக்காகவே மறுபடியும் படிக்கலாம்.
பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவனின் மகளாகிய குந்தவி தேவியின் அழகை விவரிக்கும் அழகே அழகு. அவ்வளவு வசீகரமானவள்,அழகானவள். அந்த குந்தவி தேவியின் அழகு வர்ணனைகளையும், அவளுக்கும் விக்கிரமனுக்கும் இடையிலான காதலுக்காகவும் மட்டுமே எத்தனை முறை படித்தாலும் திகட்டாது. இந்தக் காதல் காட்சி இன்னும் கொஞ்சம் நேரம் நீளாதா என்ற எண்ணம் அவர்கள் சந்திக்கும், நினைக்கும் ஒவ்வொரு சமயத்திலும் என் நினைவில் மேலோங்குகிறது. அதுவும் சரிதான். குறைவானதுதானே அதை நீளமாக்கும்.
நீங்கள் படிக்க விரும்பினால் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.