இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் பலனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது.
எந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தகவல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஏற்பட்டது. உதாரணமாக Cereal Box என்ற வார்த்தை நறுமணத்திரவியங்கள் தொடர்பாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பொருள் நறுமணத்திரவியத்தைப் போலவே ஒரு அட்டைப் பெட்டியில் பெரியதாக செய்து கடைகளில் காட்சிக்கு வைப்பது. இதனை நாம் பல முறை கண்டிருந்தாலும், அதற்குப் பின்னாலும் ஒரு திட்டமிடல் இருக்கிறது எனும்போது புதிய அனுபவமாய் அது அமைகிறது. இனி அதனைப் பார்க்கும் பொழுது நம் பார்வை மாறுபடலாம்.
இதனைப் போலவே வாசனைத்திரவியத்தின் மேல் மூடியில் இருக்கும் அழுத்து விசையை Actuator என்று குறிப்பிடுகின்றனர். இதனைப் போலவே Tulip Mania, Hockey Stick எனப் பல வார்த்தைகள் உண்டு. அது தொடர்பான விளக்கங்களும் உண்டு. புதிய வார்த்தைகளையும் பொருள்களையும் விரும்புபவர்களும், ஆர்வமுடையவர்களும் வாசிக்கலாம்.
நன்றி.