உண்மை மனிதர்களின் கதைகள்.
ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. வம்சி பதிப்பக வெளியீடு.
ஒரு சில நூல்களின் மேல் நம் கருத்தையோ, எண்ணத்தையோ வைப்பதற்கு குறைந்த பட்ச தகுதி என்ற ஒன்று எப்போதும் தேவை என்று நினைப்பவன் நான். இதனை எழுதும் இந்த வேளையில் அத்தகுதி இல்லாதவனாகவே உணர்கிறேன், இருக்கிறேன். ஆதலால் இந்த நூலைப் பற்றி எந்த பார்வையையும் நான் வைக்கமாட்டேன், இப்போதைக்கு.
ஆனால் காரணமில்லாமல் ஒரு எழுத்தின் வழியாக மட்டுமே என்னை அழ வைத்த நூல், இது. இந்நுலின் வாயிலாக நான் அடைந்த உணர்வுகளை, திறப்பை விளக்க இயலாத நிலையிலேயே இருக்கின்றேன். இக்கதையோடு நிறுத்திவிட வேண்டுமென்றே எல்லாக் கதைகளையும் வாசித்துவிட்டேன். இத்தனை விரைவாக, தொடர்ச்சியாக ஒரு நூலை நான் இதுவரை வாசித்தது இல்லை. இந்த நிலையிலிருந்து நான் மீண்டு வர சில காலம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். வாசியுங்கள், வாசியுங்கள். கண்டிப்பாக வாசியுங்கள்.