Rise of the Planet of the Apes

Rise of the Planet of the Apes

2011 ஆம் ஆண்டு Rupert Wyatt இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நடிப்பு James Franco. இவர்தான் சமீபத்தில் வெளிவந்த Interview மற்றும் 127 Hours திரைப்படங்களில் நடித்தவர். நாயகி Freida Pinto. இவர் இந்தியப் பெண் . Slumdog Millionaire படத்தில் நடித்த அதே பெண்.

கதைப்படி வில் ரோட்மென் ஒரு ஆய்வாளர். அல்சமீர் ( Alzheimer) போன்ற மறதி நோய்களுக்கான‌ மருந்தினைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ALZ-112 என்னும் மருந்தைக் கண்டறிகிறார். பின்னர் அதனை சோதனைக்காக ஒரு சிம்பன்சியின் மீது செலுத்தி அதன் விளைவுகளைப் பரிசோதிக்கிறார். அப்படி செலுத்தப்பட்ட சிம்பன்சி மிகவும் புத்திசாலித்தனமாக மாறுகிறது, அத்தோடு அதன் கண்களும் பச்சை நிறமாக மாறுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த திட்டத்தின் முதலீட்டாளர்களிடம் இதனை விளக்குகிறார் வில்லின் முதலாளி Steven Jacobs. அப்போது திடீரென்று வெறி கொள்ளும் அந்த சிம்பன்சி அங்கிருக்கும் அனைவரையும் தாக்கிவிட்டு முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கும் வந்து அனைவரையும் தாக்க ஆரம்பித்து விடுகிறது. அதனால் பாதுகாவலர்கள் அதனை கொன்று விடுகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் விரக்தியடைய இத்திட்டத்தை கைவிடுவதாகவும், அனைத்து சிம்பன்சிகளையும் வலிக்காமல் கொன்று விடும்படி சிம்பன்சிகளைப் பாதுகாக்கும் Robert Franklin னிடம் கூறுகிறார் முதலாளி Steven Jacobs. வில் எவ்வளவோ கேட்டும் ஆய்வைத்தொடர மறுத்துவிடுகிறார் Jacobs. அதனைத் தொடர்ந்து சிம்பன்சிகளைக் கொல்லச் செல்லும்பொழுது தற்பொழுது இறந்த சிம்பன்சி சற்று முன்னர் ஒரு குட்டியை பிரசவிப்பதை கண்டுகொள்ளும் Robert Franklin அதுவே அச்சிம்பன்சியின் வெறிச்செயலுக்கு காரணம் என கூறுகிறார். மேலும் அந்தக் குட்டியை மட்டும் கொல்லாமல் வில்லிடம் கொடுத்து பாதுகாக்கும்படிக் கூறுகிறார் . தன்னுடன் எடுத்துச் செல்கிறான் வில்.

திருக்குறள் – 1

திருக்குறள் – 1

"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை - பொருள்செயல்வகை" (758) யானைகள் போரிடுவதைப் பார்க்க விரும்பும் ஒருவன் அருகில் சென்றால் என்ன நடக்கும்? யானைக் குளம்படிகளில் அடிபட்டு இறக்க நேரிடும். யானை எடையில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கு எடையுள்ள…