காந்தியும் காமமும்

மகாத்மா காந்தி குறித்த பொதுவான பல தவறான‌ அபிப்ராயங்கள் நம்மில் பலருக்கு உண்டு. குறிப்பாக அவரது ஒழுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான செயல்பாடுகள். அவற்றைப்பற்றி முழுமையான ஆய்வுகளோ, புரிதலோ இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நாம் கேட்ட, கண்ட, படித்த தகவல்களின் கழிவே…

மருந்து உலகம் – மாய உலகம்

ayurvedaஇன்றைய இந்தியக்குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் மருந்துப்பொருட்கள் வாங்காத குடும்பங்கள்? 5 விழுக்காட்டிற்கும் குறைவு.

குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிக அளவிலான‌ மருந்து மாத்திரைகள் வாங்கப்படுகின்றன. இந்தியர்களின் சராசரி ஆயுள் உயர்ந்திருந்தாலும், பெரும்பாலானோர் தன் வாழ்நாளை ஏதாவது ஒரு நோயுடன் கழிக்கின்றனர். வயது குறைந்தோறும் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.40 வயது உடையவர்களுக்கு சர்க்கரை நோய் வருவது இயல்பாகி விட்டிருக்கிறது. மருந்து மாத்திரைகள் இல்லாத வாழ்வென்ப‌து இல்லாது போனது. 

இவையெல்லாம்தான் நவீன இந்தியா.

இப்போதைய பிரச்சினை ஒவ்வொரு குடும்பத்திற்குமான மருத்துவச்செலவு. மாதந்தோறும் ஆயிரக்கணக்கில். ஏன்?

பண‌ம் அச்சடிப்பதை நிறுத்தினால் என்ன?

இந்த பதிவைப் படிப்பதற்கு முன் இந்த பதிவைப் படித்திருத்தல் சிறந்தது. அதிக பணம் அச்சடித்தால் என்ன? அதிக பணம் அச்சடித்தால் பணத்தின் மதிப்பு சரியுமென்றால் பணம் அச்சடிப்பதை நிறுத்தினால் பண மதிப்பு உயரத்தானே வேண்டும்? கேள்வி சரிதான். என்ன நடக்கும்? பணத்தின் புழக்கம்…

அதிக பணம் அச்சடித்தால் என்ன?

பொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு. இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி. அடிக்கலாம்.…

நாம் சுரண்டப்படுகிறோம்

சமீபத்தில் இந்த காணொளியை இணையத்தில் காண நேரிட்டது. அதிலிருந்து மீண்டும் நாம் தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற நவீன சித்தாந்தங்களின் வழியே சுரண்டப்படுகிறோம் என்ற எண்ணம் மேலும் வலுப்படுகிறது. காணொளி இங்கே.

தமிழ் மலாய் சொல் அரங்கம்

மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி அவர்களால் எழுதப்பெற்றுள்ள நூல். மலாய் மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஆய்வு நூல் இது. மொத்தம் 164 தமிழ்சொற்கள் நேரடியாகவும், 500 க்கும் மேலான‌ சொற்கள் 5 முதல் 10…

ஜெயமோகன் அவர்களிடமிருந்து

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலுக்கான ஜெயமோகன் அவர்களுடைய‌ பதிலை இங்கே பதிவிடுகிறேன். நான் படித்த சில புத்தகங்கள் வாயிலாகவே என்னையறியாமல் வந்த தலைக்கனத்தின் மீது மீண்டும் ஒரு குட்டு. நான் செப்பனிடப்படுகிறேன். அன்புள்ள மகிழ்நன் உங்கள் முந்தைய கதைக்கான…

ஜெயமோகன் அவர்களுக்கு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு மகிழ்நன், சிங்கப்பூரிலிருந்து. சமூகம், கலாச்சாரம், தனி நபர் செயல்பாடுகள் போன்றவற்றின் மீதான தத்தம் கேள்விகளுக்கு உங்களின் பதிலில் விடை தேடும் வாசகர்களில் ஒருவனுடைய கேள்வியல்ல இது? உங்களைப் பற்றிய, உங்கள் பதிவுகளைப் பற்றிய கேள்வி, உங்களிடமே. எங்கோ…

முதல்வருக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் அவர்களுக்கு

இவன் புதிய தொழில்நுட்பங்களையும், மென்பொருட்களையும் கற்றுக்கொள்ள விழையும் தமிழன். தமிழின்பால் கொண்ட அன்பால் தன்னால் முடிந்தவரை தொழில்நுட்ப நூல்களையும், மென்பொருள்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்ய விழைபவன்.

சிங்கப்பூரிலும் சரி, உலகின் மற்ற நாடுகளிலும் சரி மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. அதோடு உலகம் சுருங்கி வருவதன் விளைவாக இன்று அனைத்து தொழில்நுட்பங்களும், மென்பொருள்களும் அனைத்து மொழிகளையும் தாங்கி வருகின்றன.

உதாரணமாக IBM போன்ற பெரிய நிறுவனங்கள் வெளியிடக்கூடிய அனைத்து மென்பொருட்களிலும் (Software,Servers, Operating Systems, Middle ware Technologies, VMWare, etc) பன்மொழி அமைப்பு உள்ளது (Multilanguage Support). அதனால் ஆங்கிலம் தெரியாத ஒரு சீனர் அவருடைய தாய்மொழியான சீனத்தில் அந்த தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த மென்பொருளில் சீனமொழியும் நிறுவப்பட்டிருக்கிறது. இதேபோல பல மொழிகளோடு தற்போது மென்பொருட்கள் வெளிவருகின்றன.