சிங்கப்பூரில் ரமலான்

சிங்கப்பூர் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரமலான். வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான முஸ்லீம் மக்கள் மலே இனத்தவரகாவே இருக்கின்றனர். இந்திய முஸ்லீம்களும், சீன முஸ்லீம்களும் குறைந்த அளவிலேயே இருக்கின்றனர். நம் ஊரைப்போலவே இங்கும் பண்டிகைக்கால சந்தைகள் உண்டு. ஆனால் இங்கு…

நிறமும் மொழியும்

நம்மில் பலருக்கும் இந்த எண்ணம் உண்டு. சிவப்பாய் இருப்பவர்கள் அழகானவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவானவர்கள். அது தவறான எண்ணம் என்பதே திண்ணம்.

நம்மிடத்து உள்ள இந்த எண்ணம் நமக்கு முந்தைய தலைமுறையிடமிருந்து நம்மிடத்தே வந்து விட்டது. நமக்கு முந்தைய தலைமுறையிடம் இருந்த அளவிற்கு இப்போது இல்லையென்றாலும், அற‌வே இல்லையெனக் கூறிவிடலாகாது.

உண்மை இதுதான். சிவப்பு அழகல்ல, நிறம். ஆங்கிலம் அறிவல்ல, மொழி. 

கடந்த காலப் பெரும்பான்மையான புத்தகங்கள், தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் ஆங்கிலத்தில் வெளியானமையால் ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி என படிப்படியாக வலுக்கொண்டுவிட்டது. அதேபோல நம்மை ஆண்டவர்கள் வெள்ளையாய் இருந்த காரணத்தாலோ என்னவோ சிவப்பாய் இருப்பவர்கள் உயர்வானவர்கள் என்ற எண்ணம் கொண்டு பின்னாளில் சிவப்பானவர்கள் அழகானவர்கள் என்ற எண்ணமும் கொண்டுவிட்டோம்.

அடைமொழி

அடைமொழிக்கு ஆசைப்படும் மனிதாஅறிவாயா? இறந்தபின் உன் பெயரே உனதில்லை,பிணமென்பார்.

சாவு – சிறுகதை

நான் இதுவரைக்கும் பாக்காத‌ சாவு அது. வழக்கம்போல ஆபீசில‌ வேலை பார்த்துக்கிட்டுருக்கும்போதுதான் அந்த போன் வந்துச்சு. “நம்ம ஹவுஸ் ஓனர் அம்மா எறந்துட்டாங்க”. சொன்னது என் ரூம் மேட். கூடவே இதையும் சொல்லிட்டார். “வீட்ல சமைக்க முடியாதாம்; வெளியில சாப்பிட்டுக்கச் சொல்லிட்டார்”. போனை வச்சுட்டார்.

நான் வேலை பாக்குறது சிங்கப்பூருல.. வந்து வருச‌ம் ஒன்னாச்சு. நம்ம ஊர்லமாதிரி, ஹவுஸ் ஓனருன்னா நம்ம‌ ஒரு வீட்லயும் அவர் ஒரு வீட்லயும் இருக்குறதில்லை. இங்க எப்புடின்னா, நம்ம‌ ஒரு ரூம்ல இருப்போம், அவர் ஒரு ரூம்ல இருப்பார். கிச்சன் ரெண்டு பேருக்கும் பொது.

 ஹவுஸ் ஓனர் தமிழர்தான். ஆனால் சிங்கப்பூர்ல‌ பிறந்தவர். அவர் அம்மா இங்கு வந்து செட்டில் ஆனவர். ஹவுஸ் ஓனர் திருமணம் செஞ்சுக்கல. தனியாகத்தான் இருக்கிறார். வயசு ஒரு 55 இருக்கும். அவர் அம்மா அவரோட‌ இருந்ததில்லை. எங்கோ மகள் வீட்ல‌ இருக்கறதா சொல்லுவார். நாலஞ்சு தடவ‌ பார்த்திருக்கிறேன். இங்கு வருவாக. ஒரு நாள் இருந்து விட்டுப் போயிருவாங்க‌. அவுக‌தான் செத்தது.

மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது

மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு - பசித்த பொழுது. படிக்கும் பொழுது "இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?" என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கான ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு.…

சிறிது வெளிச்சம் – என் பார்வையில்

சமீபத்தில் ராமகிருஷ்ணன் எழுதிய "சிறிது வெளிச்சம்" நூலைப் படித்தேன். ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல புத்தகம். நாம் அன்றாடம் சந்திக்கும் கவனிக்காது விட்ட பல்வேறு அவலங்களையும், மகிழ்வுகளையும் விவரித்திருக்கிறார். வாரம் தோறும் வெளியானதாலோ என்னவோ ஒவ்வொரு அத்தியாயமும்…

நாம் நாமல்ல

நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First நாட்டாம்பட்டி பையனாம்” என்றே பலர் கூறினர். ஏன் என்னிடமே பலர் அவ்வாறு கூறியதுண்டு. இது அவர்கள் மத்தியில் என் ஊரின் மீதான மதிப்பினை சற்று உயர்த்தியிருக்கும். என்னை மறந்து அந்த நிகழ்வையும் என் ஊரையுமே மக்கள் நீண்ட நாள் நினைவில் வைத்திருந்தனர்.

இசையும் பாடலும்

நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள் தோற்றுவித்தனர். 

 ஆனால் இன்றைய நிலையில் இசை, பாடல் என்பதெல்லாம் சினிமா இசையையும் பாடலையுமே குறிக்கும் சொற்களாய் மாறிப்போய் விட்டன. இருந்தாலும் இன்றைய இசை கூட ஏதோ ஒரு வகையில் நம்மை அறியாமல் நம்மோடு கலந்து விட்டிருக்கிறது. நாம் கேட்கும் ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒன்றை நமக்கு நினைவு படுத்துகிறது.