புகழுக்கு இருபடி முன்னால்

தான் வாழும் காலத்தில் புகழ் பெற்ற அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இவ்வுலகில் எத்தனை பேர்? வெகு சொற்பம். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் மறைந்த பின்னர் பல காலம் கழித்து அவர்களை இந்த சமூகம் புகழின் உச்சியில் கொண்டு சென்று வைத்துவிடுகிறது. இது ஏன்…
இந்தியக் கண்டுபிடிப்புகள்

இந்தியக் கண்டுபிடிப்புகள்

கடந்த நூறாண்டுகளில் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனை தொழில்நுட்பங்கள் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் பூஜ்யமே. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அதன் விகிதாச்சாரம் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் புறந்தள்ளக்கூடியதே. சரி 700 கோடி மக்கள் தொகை கொண்ட…

ஒற்றைப்படையாகும் உலகம்

நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய…

வாசிப்பு

ஒட்டு மொத்த மனித குலத்திலேயே அதனை முன்னெடுத்து செல்பவர்கள் இரண்டு விழுக்காடு மட்டுமே, மற்றவர்களெல்லாம் அவர்கள் கண்டறிவதை தலைமுறை தலைமுறையாகக் கடத்துபவர்கள் மட்டுமே என்று ஒருமுறை ஜெயமோகன் கூறியிருந்தார். அதனை நான் பல நாட்கள் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். அது சரிதான்.…
சமையல்கட்டும் கிச்சனும்

சமையல்கட்டும் கிச்சனும்

கிச்சன் என்ற சொல் சமைய‌ல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது.…
அழகானவர்கள்

அழகானவர்கள்

சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்?…

ஆசானுக்கு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு இந்த‌க்கடிதத்தினை தங்களுக்கு இன்னும் சில நாட்கள் கழித்தே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் முன்னரே எழுதினால் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுவீர்கள் என்று நம்பியே இப்பொழுதே எழுதுகிறேன். முதலில் சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய…

உலகத்தொழிலாளர்களே! (ஆசானிடமிருந்து)

உலகத்தொழிலாளர்களே என்ற தலைப்பில் மே தினத்தினையொட்டி ஆசான் 2011 ல் எழுதிய கட்டுரை. எத்துனை அடர்த்தியான கட்டுரை. அவர் ஆசானாக இருப்பதில் வியப்பேதுமில்லை.

நன்றி: ஜெயமோகன்
http://www.jeyamohan.in/16732#.VUbd7_mqqko

மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்! அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

இன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது, மேம்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. எனக்கு இதற்கு ஒற்றை வரிப் பதிலாகச் சொல்லமுடியவில்லை. உழைப்பாளிகளின் இடம் என்பது சமூக அமைப்பு சார்ந்து மாறுபடக் கூடியது.

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உழைப்பாளி என்பவன் நிலத்தின் ஒரு பகுதி போல! நிலத்தை உரிமையாக்கி வைத்திருப்பவர், உழைப்பாளிகளையும் உரிமை கொண்டிருக்கிறார். அந்த உழைப்பாளிகள் வாழ வேண்டியது அவருக்கு தேவை என்பதனால் அவர்கள் வாழத் தேவையான உணவு, உறைவிடத்தை அளிக்கிறார். சமூகப் பாதுகாப்பையும், சமூகக் கொண்டாட்டங்களையும் கொடுக்கிறார். அவனுடைய உழைப்பை முடிந்தவரை கறந்து கொள்கிறார். அந்த உழைப்பு அவரது சொத்து.

இந்த மனநிலை நில உடைமையாளரால் மட்டும் அல்ல, உழைப்பாளிகளாலும் பகிர்ந்து கொள்ளப் பட்டது. இது விசுவாசம் என்று அவர்களால் சொல்லப் பட்டது. அவர்களுக்கு அந்த நில உடைமையாளருடன் உள்ள உறவு ரத்தஉறவு அளவுக்கே நிரந்தரமானது, உணர்ச்சிகரமானது. பல் வேறு தொன்மங்களாலும், நம்பிக்கைகளாலும் புனிதப் பட்டது அது. அதை விசுவாசம் என்ற சொல்லால் நாம் குறிப்பிடுகிறோம். வாழ்வோ, சாவோ என தன் உடைமையாளருடன் இருக்கும் மனநிலை அது.

அறிதலின் துவக்கம்

அறிதலின் அடிப்படைத்துவக்கமே தன் குறைகளைத் தன்னளவில் ஏற்றுக்கொள்வதே. தன் செயலை சரியாக செய்யக்கூடிய ஒருவன் அதனை மேம்படுத்தும் வழியைத் தேடுகிறான். தன்னால் செயலையே செய்து முடிக்க‌ முடியாத ஒருவன் அச்செயலை செய்து முடிப்பதையே பெரிய சாதனையாகக் கருதும்பொழுது அங்கே மேம்படுத்துவது என்ற‌…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

"இது எதுக்கு? சறுக்கி வெளையாடுதக்கா?" "கெடட்டி" இந்த வரியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன் கிட்டத்தட்ட இரண்டு வாரமாக‌. நேற்று புத்தகத்தை நூலகத்தில் திருப்பி செலுத்தும்பொழுது அமர்ந்து மீண்டும் அவ்விடத்தை வாசித்தேன். வாய்விட்டு சிரித்துவிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். பார்த்து விட்டுப் போகட்டுமே!…