இங்கிலாந்து ஸ்காட்லாந்து இணைப்பு
டொலென்டினோ ஒப்பந்தம்
லிவ்ரே டூர்னாய்ஸ்
Gambian Dalasi
Parliment of Great Britain
House of Common & House of Lords என்பவை இங்கிலாந்தின் பாராளுமன்றத்தின் இரு அவைகள் ஆகும். இந்திய அரசியலமைப்பும் இங்கிலாந்து அரசியலமைப்பைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது.
இங்கிலாந்தின் பாரளுமன்றம் பற்றிய சில தகவல்கள்.
இங்கிலாந்து பாரளுமன்றம் House of Common & House of Lords எனும் இரு அவைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.House of Common எனும் அவை 650 உறுப்பினர்களைக் கொண்டது. அனைத்து உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.
650 உறுப்பினர்களில் 533 உறுப்பினர்கள் இங்கிலாந்தில் இருந்தும் 40 உறுப்பினர்கள் வேல்ஸில் இருந்தும் 59 உறுப்பினர்கள் ஸ்காட்லாந்தில் இருந்தும், 18 உறுப்பினர்கள் வடக்கு அயர்லாந்தில் இருந்தும் தேர்வு செய்யப்படுகின்றனர்.அவையின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலொழிய முன் கூட்டியே தேர்தலை நடத்த முடியாது.
உறுப்பினர்கள் அனைவரும் Palace of Westminister ல் கூடி விவாதிப்பர், அதுவே அரசின் அலுவலகமும்.House of Lords (பேராயர்கள் அவை) எனப்படும் மற்றோர் அவை நேரடியாக நிர்ணயம் செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்டது. இங்கு மொத்தம் 780 உறுப்பினர்கள்.
அவர்களில் பலர் தேவாலயத்தின் பாதிரியார் குழுவாலும், பரம்பரைக் குடும்ப உரிமைகளாலும் நிர்ணயம் செய்யப்படுகின்றனர்.
லூவர் அருங்காட்சியகம்
லூவர் அருங்காட்சியகம் பிரான்ஸிலுள்ள ஓரு உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகம். அங்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த புராதானச்சின்னங்கள் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஒவியம் இங்குதான் உள்ளது.
இந்த அருங்காட்சியகம் பற்றிய சில தகவல்கள்.
இந்த அருங்காட்சியகம் 60 சதுர கிமீ பரப்பளவில் செய்ன் நதிக்கரையில் அமைந்துள்ளது.
வருடத்திற்கு 97 லட்சம் மக்கள் இங்கு வருகின்றனர்.
உலகிலேயே அதிக மக்களால் கண்டுகளிக்கப்பட்ட அருங்காட்சியகம் இதுதான்.
மொத்தம் 380000 க்கும் அதிகமான நினைவுச் சின்னங்கள் உள்ளன.அவற்றுள் ஒவியங்கள் மட்டும் 35000க்கும் அதிகம்.
முதன்முதலாக இரண்டாம் பிலிப் மன்னனால் 12 ஆம் நூற்றாண்டில் வசிப்பதற்காக கட்டப்பட்டது. பின்னர் பல்வேறு மன்னர்களால் மாற்றம் செய்யப்பட்டது.