காஷ்மீரும் ராணுவமும்

காஷ்மீர் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள் பற்றிய நேரத்தில் வாசித்த சிறந்ததொரு கட்டுரை. திருச்சி வே விஜயகிருஷ்ணன் அவர்களால்.

எனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை பணயம் வைக்கும் தனிமனித சுதந்திரங்களுக்கு அப்பால் உட்கட்டமைப்பு கொண்ட ஒரு இயக்கத்தின் மீது அதிகமான மரியாதைதான். அதனால் அவர்கள் சாமானியர்கள் போல் குற்றங்கள் புரிவதில்லையா என்று கேள்வி அபத்தமானது. உண்டு. எல்லா மனிதர்களை போல் அவர்களும் குற்றம் புரிகிறார்கள். ஆனால் எல்லா வகையிலும் சுதந்திரத்தை அனுபவிக்கும் எல்லாவிதங்களிலும் தன் மன அழுத்தங்களை இலகுவாக்கக்கூடிய சாந்தியங்க்களை கொண்ட வாழ்வில் வாழ்ந்துகொண்டு இக்கட்டான சூழலில் வாழ்பவர்களை விமர்சிக்ககூடாது. இராணுவத்தினரையும் சாமான்யர்களை சமன் சட்ட நிலையில் நிறுத்துவது உடன்பாடில்லை.

இங்கு இராணுவத்தை ஒரு இயக்கமாக பார்க்கிறோம். உடனே ஒரு தனி நிகழ்வை சுட்டிக்காட்டி அதை பொது படுத்துதல் ஏற்புடையதல்ல. சங்கடமான மன அழுத்தங்கொண்ட சூழலில் உயிரை பணயம் வைக்கும் வேளையில் ஈடுபடுவோரை சாமான்யனுக்குறிய சட்டங்கள் வழியே தண்டிக்க சொல்வது அபத்தத்தின் உச்சம்.

என்னத்தான் நினைக்கிறார்கள் இவர்கள்? இராணுவத்தை கலைத்துவிடலாம் என்றா? இல்லை எல்லா இராணுவ வீரரையும் புத்தர்களாக மாற்ற வேண்டும் என்றா?

நேரு பற்றி ராமச்சந்திர குஹா

நேரு அவர்களைப் பற்றி எழுத்தாளர் ராமச்சந்திர குஹா அவர்களின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் காந்திடுடே தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த கட்டுரை.


1976ஆம் ஆண்டு, இந்தியாவில் அவசரநிலைச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தபோது, ஏ எம் ரோசன்தால் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் புது தில்லிக்கு வந்திருந்தார். முன்னொரு காலத்தில், ந்யூ யார்க் டைம்ஸின் இந்திய நிருபராக இங்கு இருந்திருந்தவர் அவர். அவர் ஜவகர்லால் நேருவின்மீது மிக அதிக மரியாதை வைத்திருந்தார். எங்கும் நிறைந்திருந்த சமூக ஏற்றத்தாழ்வுகளாலும் சமய அடிப்படையில் எதிரெதிர் துருவ பிளவுகளாலும் காயப்பட்டிருந்த தேசத்தில் ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்ட இந்தியாவின் முதல் பிரதமர் எவ்வளவு தீரமாகப் போராடியிருந்தார் என்பதை நேரடியாகப் பார்த்தவர் அவர்.

தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. அனைவரையும் வாழ்த்தும் அதே வேளையில் இந்த தேர்வு முடிவுகளின் உண்மை நிலையை நாம் விவாதிக்க…

புதிய இந்தியா

16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே…

தேவை நிரந்தர ஆட்சி

ஒருவழியாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி என்பது முடிவாகிவிட்டது. காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்து அவர்கள் ஆதரவிலேயே ஆட்சியும் அமைக்க வேண்டிய சூழ்நிலை. ஆம் ஆத்மி காங்கிரஸ் நிபந்தனை இல்லாத ஆதரவு அளித்திருப்பதாகக் கூற, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க…

தேவயானி கோப்ரெட்களும் சங்கீதாக்களும்

ஒருவர் எந்த ஒரு நாட்டில் வாழ்கிறாரோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இருக்க‌ வேண்டும் என்பதே உலக நாடுகளின் பொது விதி. இதுதான் ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கும்.நாம் நம் நாட்டைத் தவிர்த்து வேறு நாட்டிற்குச் செல்லும்போது நமக்கு வ‌ழங்கும்…