இன்றைய காந்தி ‍- ஜெயமோகன்

இன்றைய காந்தி ‍- ஜெயமோகன்

இன்றைய காந்தி - ஜெயமோகன் மகாத்மா காந்தி அவர்களைப் பற்றி உண்மையாக அறியத் தொடங்க விரும்புபவர்களுக்கான சிறந்த தொடக்க நூல். ஜெயமோகன் அவர்களால் அவரது இணைய தளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த கேள்வி பதில் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அஹிம்சைப் போராட்டம் எவ்வளவு…
வெள்ளை யானை

வெள்ளை யானை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் எழுதப்பெற்று 2014 ல் வெளிவந்த நாவல். 1800 களின் பிற்பாதியில் நடந்த ஐஸ் ஹவுஸ் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. ஏய்டன் என்னும் அயர்லாந்து நாட்டு பிரஜை இங்கிலாந்து அரசிற்காக சென்னையில் ராணுவ அதிகாரியாகப் பணி புரிகிறான்.…

ஆசானிடமிருந்து

அன்புள்ள ராஜேஷ், ஒட்டுமொத்தமாக வாசிப்பது முக்கியமானது. அது நமக்கு ஒரு மூழ்கியிருக்கும் அனுபவத்தை, வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிக்கிறது.ஆனால் ஒவ்வொருநாளும் வாசிக்கையில்தான் நாம் தனிவரிகளை அதிகமாகக் கவனிக்கிறோம். நம் மனமொழி அதற்கேற்ப மாறுகிறது. ஜெ

மீண்டும் ஆசானுக்கு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். மீண்டும் வெண்முகில் நகருக்கு வந்து விட்டேன். ஆம் சில மாதங்களுக்கு முன்னர் வண்ணக்கடல் படிக்கும்போது தினமும் வாசிப்பதனைவிட ஒரே மூச்சாக ஒவ்வொரு புத்தகமாக வெளிவரும்பொழுது வாசிக்கலாம் என்ற எண்ணத்தை அடைந்தேன். அதன் காரணமாக தினசரி வாசிப்பை…

ஆசானிடமிருந்து

நான் எழுதிய மடலுக்கு ஆசானின் பதில். அன்புள்ள ராஜேஷ் புனைவை வாசிப்பதற்கான திறன் அனைவருக்கும் இயல்பிலேயே அமைவதில்லை. மிக‌ச்சிலருக்கே மொழியை உடனடியாக சித்திரங்களாக மாற்றிக்கொள்ள முடிகிறது என்பதைக் கண்டிருக்கிறேன். அது ஒரு பெரிய வரம். அந்த வரத்தை நாம் நம் நிறைவுக்காக…

ஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள்…

உலகின் நிலைப்புள்ளி

பெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய‌ காலங்களில் அத்தகைய‌ நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும்…

கேள்வி பதில்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, மிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்திய நாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம். என்னுடைய வேலையும் என்னுடைய…

பெண்கள்,படைப்பாளிகள்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்

சமீபத்தில் நடைபெற்று வரும் இளம் படைப்பாளிகள் தொடர்பான கருத்து மோதல்களை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அது தொடர்பான முழு சித்திரத்தையும் அறிந்து கொள்ள தொகுத்துள்ளேன்.

ஆனந்த விகடன் வார இதழின்  விகடன் மேடை பகுதியில் ஒரு வாசகரின் கேள்வியும் அதற்கு நாஞ்சில் நாடன் அவர்களின் பதிலும் என இந்நிகழ்வு தொடங்கியது.

”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”
பார்வதி, திருநெல்வேலி

நாஞ்சில் நாடன்:
”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, என்.ஸ்ரீராம், தூரன் குணா, சந்திரா, இளஞ்சேரல், அ.வெண்ணிலா, லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் சாதிக்கிறவர்களும் நம்பிக்கை தரக்கூடியவர்களும். மீனா, தி.பரமேசுவரி, ச.விசயலட்சுமி ஆகியோர் திறனுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள். கவிஞர்களில் உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, சக்தி ஜோதி, சாம்ராஜ், லிபி ஆரண்யா, இசை, இளங்கோ கிருஷ்ணன் என்போர் என்னைக் கவர்ந்தோரில் சிலர். வகை மாதிரிக்காக சில பெயர்களைச் சொன்னேன்!”
writes_new
அதற்கு ஜெயமோகன் அவர்கள் அந்தப் பட்டியல் மீதான தன்னுடைய நிலைப்பாட்டினை தன் வலைத்தளத்தில் இவ்வாறாக பதிவு செய்திருந்தார்.

ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள்.