உன்னதத்தின் பக்கம் ஒரு அங்குலம்

ஒரு அரசு அதனுடைய பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமா என்று கேட்டால் அதற்கான பதிலாக நம்மில் பெரும்பாலானோர் மனதில் உதிப்பது ஆம் என்பதுதான். ஏனென்றால் இன்றைய நிலையில் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் ஒரு அரசு என்பது அதன் மக்களாலேயே தேர்வு…

புகழுக்கு இருபடி முன்னால்

தான் வாழும் காலத்தில் புகழ் பெற்ற அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இவ்வுலகில் எத்தனை பேர்? வெகு சொற்பம். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் மறைந்த பின்னர் பல காலம் கழித்து அவர்களை இந்த சமூகம் புகழின் உச்சியில் கொண்டு சென்று வைத்துவிடுகிறது. இது ஏன்…

ஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள்…

காஷ்மீரும் ராணுவமும்

காஷ்மீர் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள் பற்றிய நேரத்தில் வாசித்த சிறந்ததொரு கட்டுரை. திருச்சி வே விஜயகிருஷ்ணன் அவர்களால்.

எனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை பணயம் வைக்கும் தனிமனித சுதந்திரங்களுக்கு அப்பால் உட்கட்டமைப்பு கொண்ட ஒரு இயக்கத்தின் மீது அதிகமான மரியாதைதான். அதனால் அவர்கள் சாமானியர்கள் போல் குற்றங்கள் புரிவதில்லையா என்று கேள்வி அபத்தமானது. உண்டு. எல்லா மனிதர்களை போல் அவர்களும் குற்றம் புரிகிறார்கள். ஆனால் எல்லா வகையிலும் சுதந்திரத்தை அனுபவிக்கும் எல்லாவிதங்களிலும் தன் மன அழுத்தங்களை இலகுவாக்கக்கூடிய சாந்தியங்க்களை கொண்ட வாழ்வில் வாழ்ந்துகொண்டு இக்கட்டான சூழலில் வாழ்பவர்களை விமர்சிக்ககூடாது. இராணுவத்தினரையும் சாமான்யர்களை சமன் சட்ட நிலையில் நிறுத்துவது உடன்பாடில்லை.

இங்கு இராணுவத்தை ஒரு இயக்கமாக பார்க்கிறோம். உடனே ஒரு தனி நிகழ்வை சுட்டிக்காட்டி அதை பொது படுத்துதல் ஏற்புடையதல்ல. சங்கடமான மன அழுத்தங்கொண்ட சூழலில் உயிரை பணயம் வைக்கும் வேளையில் ஈடுபடுவோரை சாமான்யனுக்குறிய சட்டங்கள் வழியே தண்டிக்க சொல்வது அபத்தத்தின் உச்சம்.

என்னத்தான் நினைக்கிறார்கள் இவர்கள்? இராணுவத்தை கலைத்துவிடலாம் என்றா? இல்லை எல்லா இராணுவ வீரரையும் புத்தர்களாக மாற்ற வேண்டும் என்றா?

நாம் ஏன் வாசிக்க வேண்டும்?

எல்லோரும் வாசிப்பதில்லை. ஒரு சிலரே வாசிக்கின்றனர். அவர்கள் எதற்காக வாசிக்கிறார்கள்? வாசிப்பு சோறு போடுகிறதா? ஆம்,உலகுக்கே சோறு போடுகிறது, இவ்வுல‌கையே இயக்குகிறது. உலகையே நிர்ணயம் செய்கிறது. வாசிப்பு இல்லாதவனிடத்து தானும் உலக நடப்பு தெரிந்ததைப்போலவும், தானும் வாசிப்பவன் என்ற எண்ணம் கொண்டிருக்கச்…

தொடர்பெனும் சிக்கல்

மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு.

பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம் தொடர்பு.

பூமி தன்னை ஒரு முறை சுற்றிக்கொள்ளும் காலத்தில் பூமியை பல முறை சுற்றக் கூடிய செயற்கைக்கோள்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.அதோடு இணையம் வழியாக உலகின் அனைத்து மூலைகளில் நடப்பவற்றையும் அதே கணத்தில் அல்லது அடுத்த கணத்தில் அறியும் வாய்ப்பு சாத்தியமாகியிருக்கிறது. காரணம் தொடர்பு.

முன்ன‌ர் ஒரு நாட்டிலோ ஒரு பகுதியிலோ வறட்சி ஏற்படும் பொழுது மற்றோர் பகுதியில் இருந்து உற்பத்திப் பொருட்களும், உணவுப்பொருட்களும் கொண்டுவரப்பட்டதில்லை. காரணம் தொடர்பின்மை அல்லது எங்கு அதிகம் விளைந்திருக்கிறது என்பதைக் அறிய முடியாத நிலைமை. ஆகவே பல்லாயிரம் மக்கள் பஞ்சத்தால் இறந்தனர். ஒரு பக்கம் தேவையைவிட அதிகமான விளைச்சல், மற்றோர் பக்கம் உணவுக்கே வழியில்லை. ஆனால் இன்று அதீத தொடர்பின் விளைவாக பற்றாக்குறை, வறட்சி போன்றவை மிகப்பெரிய அளவில் ஒழிக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் வெங்காயம் விளையாமல் போனால் எங்கு வெங்காயம் விலை குறைவாக இருக்கிறதோ அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்கிறோம். காரணம் தொடர்பு.