சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

நீண்ட நாட்களாக கேள்விப்பட்டுக்கொண்டு இருந்த, ஆனால் வாசித்திராத ஒரு நாவல். ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பெற்று தொடர்கதையாக வெளிவந்தது. கதை நாயகி கங்கா பாலியல் ரீதியாகப் எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறாள். அதன் காரணமாக அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே நாவலின் சுருக்கம். கங்கா முற்போக்கிற்கும்,…
மாங்கொட்ட சாமி – புகழ்

மாங்கொட்ட சாமி – புகழ்

எழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும். இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ்…
சிங்கப்பூர் இலக்கிய முகாம் ‍ 2016

சிங்கப்பூர் இலக்கிய முகாம் ‍ 2016

ஜெயமோகன் சிங்கப்பூரில் உடனுறை எழுத்தாளர் திட்டத்தின் கீழ் இருமாதங்கள் பணியாற்றினார். பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தவும், எழுதப் பயிற்சி அளிக்கவுமான ஓர் திட்டம். அவர் சிங்கப்பூரில் இருப்பதனால் இந்த வருட இலக்கிய முகாமை சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டனர். இரண்டு நாள்…

ஆசானிடமிருந்து

இது ஏன் நிகழ்கிறது? இச்செயலை இச்சமூகம் sanction செய்கிறது. இல்லை என்றால் இவர்கள் பதறுவார்கள் இல்லையா? ஊழலை ஒழுங்கின்மையை ஒவ்வொரு கணுவிலும் அங்கீகரிக்கும் மக்களாக நாம் ஆகிவிட்டோம். அந்த மனநிலையைத்தானே அத்தனை அமைப்புகளும் செய்கின்றன அன்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராகக் கிளர்ந்தபோது…

ஆசானுக்கு

தனி மனித வாழ்வில் ஒழுக்கமாய் வாழும், வாழ நினைக்கும் நாமெல்லாம் வெறுமனே பார்த்துக்கொண்டே செல்லவேண்டியதுதானா? இல்லை அவர்கள் நம் பிரதிபலிப்புகளே (நீங்கள் சொன்னது) என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதானா?

உலகத்தொழிலாளர்களே! (ஆசானிடமிருந்து)

உலகத்தொழிலாளர்களே என்ற தலைப்பில் மே தினத்தினையொட்டி ஆசான் 2011 ல் எழுதிய கட்டுரை. எத்துனை அடர்த்தியான கட்டுரை. அவர் ஆசானாக இருப்பதில் வியப்பேதுமில்லை.

நன்றி: ஜெயமோகன்
http://www.jeyamohan.in/16732#.VUbd7_mqqko

மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்! அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

இன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது, மேம்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. எனக்கு இதற்கு ஒற்றை வரிப் பதிலாகச் சொல்லமுடியவில்லை. உழைப்பாளிகளின் இடம் என்பது சமூக அமைப்பு சார்ந்து மாறுபடக் கூடியது.

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உழைப்பாளி என்பவன் நிலத்தின் ஒரு பகுதி போல! நிலத்தை உரிமையாக்கி வைத்திருப்பவர், உழைப்பாளிகளையும் உரிமை கொண்டிருக்கிறார். அந்த உழைப்பாளிகள் வாழ வேண்டியது அவருக்கு தேவை என்பதனால் அவர்கள் வாழத் தேவையான உணவு, உறைவிடத்தை அளிக்கிறார். சமூகப் பாதுகாப்பையும், சமூகக் கொண்டாட்டங்களையும் கொடுக்கிறார். அவனுடைய உழைப்பை முடிந்தவரை கறந்து கொள்கிறார். அந்த உழைப்பு அவரது சொத்து.

இந்த மனநிலை நில உடைமையாளரால் மட்டும் அல்ல, உழைப்பாளிகளாலும் பகிர்ந்து கொள்ளப் பட்டது. இது விசுவாசம் என்று அவர்களால் சொல்லப் பட்டது. அவர்களுக்கு அந்த நில உடைமையாளருடன் உள்ள உறவு ரத்தஉறவு அளவுக்கே நிரந்தரமானது, உணர்ச்சிகரமானது. பல் வேறு தொன்மங்களாலும், நம்பிக்கைகளாலும் புனிதப் பட்டது அது. அதை விசுவாசம் என்ற சொல்லால் நாம் குறிப்பிடுகிறோம். வாழ்வோ, சாவோ என தன் உடைமையாளருடன் இருக்கும் மனநிலை அது.